பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



28

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்



நேரில் பேசுவதுபோல அவர் பேச்சு முறையும் அமைந்திருந்தது. பட்டிமன்றங்களில் மிகச் சுலபமாக வெற்றி பெற்றார். சொல் ஒவ்வொன்றும் கேட்போர் மனத்தைக் கவர்ந்தது. இராணுவ வீரர்போல் நேராக நின்று, கைகளை உயர்த்தி, தலையை அசைத்துப் பேசி வந்தார்.

சிறந்த சொற்பொழிவாளர்களான ஹிலரி பெல்லாக், செஸ்டர்டன் ஆகியோர் அக்காலத்தில் லண்டனில் இருந்தார்கள். அவர்களோடு ஷா நிகழ்த்திய சொற்பொழிவுகள் அப்பொழுது சிறப்புமிக்க நிகழ்ச்சிகளாக இருந்தன.

பல பட்டிமன்றங்களில் கலந்து கொண்டார்; பல வகையான நூல்களையும படித்துத் தேர்ந்தார். பேராசிரியர் இப்ஸனின் நூல்களையும் விரும்பிப் படித்தார்.

அறிவியலும் பொருளாதாரமும்

அக்காலத்தில், ஷாவின் சொற்பொழிவு பெரும்பாலும் அறிவியலுக்கும், சமயத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றியதாகவே இருந்தது.

ஒரு சமயம் ஹென்றி ஜார்ஜ் என்னும் அமெரிக்கரின் ஆழ்ந்த நுட்பமான சொற்பொழிவைக் கேட்ட பிறகே ஷாவின்