பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

29


பேச்சு, சிறிது சிறிதாக பொருளாதாரத்துறைக்குத் திரும்பியது.

ஷாவே ஒரு கூட்டத்தில் பேச முற்பட்டார். அப்பொழுது அங்கே ஒருவர் “கார்ல் மார்க்ஸ்” எழுதிய மூலதனம் (Capital) என்ற நூலைப் படிக்காதவர்கள் பொருளாதாரத்தைப்பற்றி பேச முன்வரக்கூடாது என்று சொன்னார். அவரே ஷாவின் மனத்தை மாற்றியவர்.

ஷா உடனே லண்டன் பொருள்காட்சி நூல் நிலையத்துக்குச் சென்று ‘மூலதன’ நூலில் ஆழ்ந்துவிட்டார். ‘மார்க்ஸின் கருத்து எனக்கு புது விளக்கமாகக் காணப்பட்டது.அதுதான் என் வாழ்க்கையின் திருப்பம்’ என்று கூறுகிறார் ஷா.

பொதுவுடைமைக் கொள்கை

அடுத்த கூட்டத்துக்கு ஷா சென்றபோது, அங்கே தாமும் இன்னொருவரும் தவிர, யாருமே மார்க்ஸின் நூலைப் படிக்கவில்லை என்பதை அறிந்து கொண்டாராம்.

அந்த நூலைப் படித்த பிறகே புதிதாக நிறுவப்பட்ட பேபியன் சங்கத்தில் சேர்ந்து தொண்டாற்றினார். மேலும் அங்கே தலைவராக அமர்ந்து பொதுவுடைமைக்