பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



30

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்


கொள்கைகளைப் பரப்புவதற்காகப் பேசியும் எழுதியும் உழைத்து வந்தார்.

பிற்காலத்தில் அவர், கார்ல் மார்க்ஸ் எழுதிய எல்லாவற்றையும் ஏற்காமல் சிலவற்றில் கருத்து வேறுபட்டார். ஆயினும், “வரலாறு நாகரிகம், வாழ்க்கை முதலிய பலவற்றிலும் என் கண்ணைத் திறந்தவர் மார்க்ஸ்தான்” என்று பெருமையாகக் கூறுகிறார் ஷா.

ஷா எந்த ஆசிரியருடனும் முழுதும் உடன்படுவதில்லை. அதைப்போலவே, கார்ல் மார்க்ஸுடனும் முழுதும் உடன்பட்டதில்லை. தம்முடைய பல கருத்து வேறுபாடுகளைச் சில நூல்களின் முகவுரைகளில் விளக்கி எழுதியுள்ளார்.

இடையறாத உழைப்பு

இரவும் பகலுமாக, பல துறைகளிலும் உழைத்து இருபது ஆண்டுகள் பாடுபட்டார். அப்பொழுது பல நூல்களைக் கற்று, அறிவை வளர்த்தார். உக்கம் மிகுந்தவராய் உழைத்தார். பலவற்றைப்பற்றி இடைவிடாமல் குறிப்புகள் சேகரித்துக் கொண்டார். பன்னிரண்டு ஆண்டுகள் பல கூட்டங்களில் பேசினார் ஆனால் பேச்சுக்களால் அவர் கண்டது என்ன? அலுப்பையே