பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

31


கண்டார். பொதுமக்கள் கூடி, அவருடைய பேச்சுக்களைக் கேட்டு, கைதட்டிப் புகழ்ந்தார்கள். அமைதியாக தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள். பேச்சால் விளைந்தவை இவையே.

ஆட்சி எவ்வாறு அமைய வேண்டும்?

ஷா எதிர்பார்த்தபடி, எவரும் முன்னேற்றத்துக்கான முயற்சிகளைச் செய்யவில்லை. அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களைக் குறைசொல்லிப் பயன் என்ன? நாள்தோறும் வயிற்றுப் போராட்டத்திற்காக பாடுபடும் மக்களுக்கு முன்னேற்றத்தை எண்ணிப்பார்க்க நேரம் உண்டா? இதனால் ஷா கொண்டிருந்த நம்பிக்கை தளர்ந்து, குடியாட்சி முறையில் குறை கண்டார். மக்களுக்காக, மக்களால் நடைபெறும் மக்களாட்சியே குடியாட்சி என்பது இயலாத காரியம் என அவர் கண்டார். அது மக்களாட்சியாக - மக்களுக்காக நடைபெறும் ஆட்சியாகவும் இருக்கும். ஆனால், மக்களால் நடைபெறும் ஆட்சியாக மட்டும் இருக்க முடியாது; பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பு ஏற்ற அறிஞர் சிலரால்தான் நடைபெற முடியும்; பொதுமக்களை வற்புறுத்தி முன்னேற்றினால்தான் வழி உண்டு என்பனவற்றை அவர் உணர்ந்தார்.

அவ்வாறு அவர்கள் ஆட்சி செலுத்தும்போது, உழைத்தால்தான் உணவு உண்டு என்னும் கொள்கையோடு