பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



32

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்


நிற்காமல், உழைத்தால்தான் உயிர்வாழ முடியும் என்று வற்புறுத்தும் அளவுக்கச் சென்று எல்லோரையும் உழைத்து, தொழில் புரியுமாற கட்டாயப்படுத்தி, ஆட்சிபுரிய வேண்டும் என்று தெளிவாக விளக்கியுள்ளார் ஷா.

ஷாவுக்கு புதுத் தொடர்பு

பேபியன் சங்கத்தில் ஷா சேர்ந்தபிறகு, வெப்ஸ் குடும்பத்தார் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

லண்டனில் பொருளாதாரக் கல்வி நிலையத்தில் படித்துக் கொண்டிருந்த டவுன் ஷெண்ட் என்னும் இளம்பெண் வெப்ஸ் குடும்பத்துக்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தாள்.

1897ல் வெப்ஸ் குடும்பத்தில் அந்தப் பெண் தங்கியிருந்தபோது ஷாவும் அங்கே தங்கியிருந்தார், இருவருக்கும் பழக்கம் உண்டாயிற்று.

‘ஷா ஒரு விந்தையான மனிதர்’ என்று அவள் அடிக்கடி கூறிவந்தாள்.

1897ல் அவர்களின் பழக்கம் முற்றி, அவள் ஷாவின் செயலாளராக ஆகிவிட்டாள். ஷா சொல்லும் விஷயங்களை எழுதுவதும், ஷாவின் களைப்புத் தீர துணைபுரிவதும் அவளுடைய கடமைகள் ஆகிவிட்டன.