பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

33



அவள் தங்கியிருந்த மாடியில் ஷா அடிக்கடி போய் காலம் கழித்தார். வெளியே நடந்து சென்றபோது இருவரும் சேர்ந்தே சென்று வந்தார்கள். ஷா வேகமாக நடப்பவர். ஆகையால், “எக்ஸ்பிரஸ் வண்டிபோல் நடக்காதீர்கள்” என்று அவள் அடிக்கடி சொல்லி ஷாவின் வேகமான நடையைக் கட்டுப்படுத்தலானாள்.

1898, மார்ச் மாதம், வெப்ஸ் குடும்பத்தினர், உலகப் பயணம் செய்யப் புறப்பட்டனர். அவர்களுடன் இளம் பெண் டவுன் ஷெண்ட்டும் புறப்பட்டாள் அவர்கள் எல்லோரும் ரோம் நகரத்தில் தங்கி இருந்தார்கள்.

நோயால் துன்புற்றார்

அந்தச் சமயத்தில் ஷா நோய்வாய்ப்பட்டு, மிக வேதனையான நிலையில் இருப்பதாக வெப்ஸ் குடும்பத்தினருக்குத் தந்தி கிடைத்தது.

அதை அறிந்த டவுன் ஷெண்ட் உடனே அடுத்த வண்டியில் லண்டனுக்குத் திரும்பினாள்.

பரிதாபமான சூழ்நிலை

அப்பொழுது நோயாளியாய் ஷா தங்கியிருந்த அறை மிகச்சிறியது. தூசி படிந்து, குப்பை கூளங்களுடன்