பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

35



திருமணத்துக்குக் காரணம்

உள்ளத்தில் உணர்ந்ததை அப்படியே செயலில் காட்டும் கொள்கையுடையவர் அல்லவா? ஆகவே ஒன்று திருமணம் செய்துகொண்டு அவளுடன் செல்வது; அல்லது தனியே அந்த அறையில் கிடந்து வருந்துவது என்று எண்ணினார். முடிவில் திருமணமே சிறந்ததாகத் தோன்றியது அவருக்கு. “அதுவும் என்னைக் கருதி அல்ல, அவளைக் கருதியே!”என விளக்கிக் கூறுகிறார்.

டவுன்ஷெண்டை அழைத்து, “ஒரு மோதிரம் கொண்டு வா; திருமணத்துக்கான நாள் குறிப்பிடு; பிறகு உன்னுடன் வருகிறேன்” என்றார்.

அவளும் சம்மதித்தாள். 1898ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியில், புது இடத்துக்குப்போகும் வழியில் திருமணப் பதிவு நிலையத்தில் இருவருக்கும் திருமணப் பதிவு நடைபெற்றது. அவருடைய நண்பர்கள் இருவர் சாட்சிகளாக வந்திருந்தனர்.

புதிய இடத்தில், போதிய வசதிகளுடன் ஷா கவனிக்கப்பட்டார். மனைவி அன்போடும், ஆர்வத்தோடும் உதவிபுரிந்து காப்பாற்றி வந்தாள்.

அப்பொழுது ஷா மாடியிலிருந்து தவறிவிழுந்து இடதுகை மணிக்கட்டின் பகுதியில் எலும்புமுறிந்து, மீண்டும் மூன்று வாரம் துன்புற்றார். பின்னர், உடல்நலம் அடைந்தார்.