பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



36

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்



சில வாரங்களுக்குப் பிறகு மறுபடியும் விழுந்து கணைக்கால் முறிந்து அவதிப்பட்டார்.

மருத்துவர்கள் ஷாவின் மரக்கறி உணவை இகழ்ந்து குறை கூறிக்கொண்டிருந்தார்கள்.

சில மாதங்களில், குணம் அடைந்து, நல்ல வீட்டில் மனைவியோடு இல்வாழ்க்கையைத் தொடங்கினார்.

குறையும் நிறையும்

எல்லோரும் ஷாவிடம் கண்ட பெரிய குறை என்ன? கர்வம் மிக்கவர்: கிறுக்குத்தனமானவர் என்பதே!

ஷா எவ்வளவுதான் அகந்தை கொண்டிருந்தாலும் கிறுக்குத்தனமாகப் பேசினாலும், எழுதினாலும் அவரை எவருமே வெறுத்ததும் இல்லை; எதிர்த்ததும் இல்லை; மறுத்ததும் இல்லை. எல்லோரும் அவரோடு சேர்ந்து சிரித்தார்கள். ஆனால் அவரைப் பார்த்துச் சிரிக்கவில்லை. அவருக்கு நிகராக எவரும் தோன்றவில்லை. அத்தகைய மேதை அவர் எல்லாவற்றிலுமே அவர் போக்கு தனியானது!

ஷாவிடம் கருத்து வேற்றுமைகள் பல காணலாம். அவர் கூறுவதை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் எதை உணர்ந்தாரோ அதையே சொன்னார்;