பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

37


துணிவோடு சொன்னார். உள்ளொன்று வைத்துபுறமொன்று பேசி, அவரால் நடிக்க இயலவில்லை.

‘தம்முடைய நூல்கள் யாவும் அரியவை, சிறந்தவை’ என்று உணர்ந்தே எழுதினார். ஆகையால், அவற்றை தாமே புகழ்ந்து கொண்டார்.

ஷேக்ஸ்பியரைக் குறை கூறியபோதிலும், குணம் கண்டபோது அவரைப் புகழ்ந்தார் ஷா. ஷேக்ஸ்பியர் பெருமையை நிலைநாட்டும் வகையில், அவர் நினைவுக்காக, அவர் பெயரால் நாடக அரங்கு ஒன்று நிறுவ பெருமுயற்சி செய்தார் ஷா. அதற்காகவே ஒரு நாடகமும் எழுதினார்.

வில்லியம் டேவிஸ் என்னும் கவிஞரைப்பற்றி எழுதி அவரை உலகம் அறியுமாறு செய்தார்.

அறிஞர் எச்.ஜி. வெல்ஸை தாக்கி எழுதினாலும் சில இடங்களில் அவரைப் புகழ்ந்தும் எழுதியுள்ளார்.

இப்படியாக, அறிஞர்களிடம் நல்லன கண்டபோது தயங்காமல் போற்றியிருக்கிறார்; சிறப்பித்தும் எழுதியிருக்கிறார்.

நாடகத்திலே விருப்பம்

‘ஷாவின் மூளையானது எல்லாவற்றையும நாடகக் காட்சியாகவே எண்ணிப் பழகிவிட்டது. ஆகையால்,