பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



38

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்


எதையேனும் நன்கு விளக்க வேண்டும் என்று ஷா கருதினால், உடனே அதைச் சிறிய ஒரங்க நாடகமாக அமைத்துத் தெளிவாகக் காட்டுவது அவர் வழக்கமாகும்.

“எதையும் நாடக அமைப்பில் விளக்குவது, எனக்கு மிகவும் எளிதாக இருக்கிறது; மிகவும் நல்ல முறையாகவும் இருக்கிறது”என்று ஷா கூறுகிறார்.

ஷா, நாடகத்தை எழுதி முடித்ததும், அதில் ஒரு வரியைக்கூட எவரையும் திருத்த அனுமதிக்கமாட்டார்.

திருத்தம் அல்லது மாற்றம் என யாரேனும் தெரிவித்தால் அது நல்லது என்று அவருக்குத் தோன்றினால், உடனே திருத்தியோ,மாற்றியோ அமைத்துவிடுவார். ஆனால், அதே சமயம் அதைத் தாமே செய்ய வேண்டும் என்ற கண்டிப்பும், உறுதியும் உள்ளவர்.

ஷேக்ஸ்பியர் துன்பியல் நாடகங்களை எழுதிப் புகழ்பெற்றார். ஷா இன்பியல் நாடகங்களை எழுதியே புகழ் பெற்றார்.

அமெரிக்கர்கள் தந்த ஆதரவு

ஷா நாடகங்கள் எழுதிப் பணம் திரட்டியதெல்லாம் அமெரிக்காவில்தான். அமெரிக்கர்கள் அவருடைய பல நாடகங்களைச் சலிப்பின்றிக் கண்டு போற்றினார்கள்.