பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

39


அதன் பிறகே, அவருடைய நாடகங்கள் பொருள் தேடிக் கொடுத்தன.

நாடகங்களை வெற்றிகரமாக நடத்துவதில் ஷா மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டார். நாடகங்களை எழுதுவதற்கான நேரத்தைவிட ஒத்திகைகள் நடத்துவதிலும், பார்ப்பதிலுமே அதிக நேரத்தைச் செலவிட்டார் ஷா.

எல்லோரையும் மகிழ்வித்துத் திருப்திப்படுத்தும் வகையில் அவரால் எழுத இயலவில்லை.

ஷாவின் நாடகச் சிறப்பை, நீண்ட நாடகள் வரையில் நடிகர்களும் உணரவில்லை; ஆராய்ச்சியாளரும் உணரவில்லை. ஆனால் அவர் சோர்வடையாமல் எழுதிவந்தார்.

ஷா முதலில் எழுதிய நாடகங்களை, அவை நாடகங்களே அல்ல என்று குறைகூறினார்கள். ஷா அதைக் கண்டு தளர்ந்துவிடவில்லை. தாம் எழுதுகின்றவை ஆராய்ச்சிகள், உரையாடல்கள் என தாமே கூறிப் புகழ்ந்துகொண்டார்.

கொலைகளும், கொடுமைகளும் இருப்பதே சிறப்பான நாடகம் என்றால், அத்தகைய நாடகங்களை எழுதுவது என் தொழில் அல்ல என்று அறிவித்தார்.

1885ல் எழுதிய சில நாடகங்களை ஷா ஒதுக்கி வைத்து, மறந்துவிட்டார். ஏழு ஆண்டுகள் கழித்தே அவை மீண்டும் நாடகமேடைக்கு வந்தன.