பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



40

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்



நாடகத்தில் சிரத்தை

பல நாடகங்களை எழுதி அரங்கேற்றிய ஷா, ஒரே ஒருமுறை நடித்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இல்லையா?

கார்ல் மார்க்ஸின் மகள் ஒரு நாடகத்தில் நடித்தபோது, அவளுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, ஷாவும் அதில் நடித்தார்.

ஒரு நாடகத்தை எழுதி முடித்ததும், அதை நெருங்கிய நண்பர்களிடம் படித்துக்காட்டுவது ஷாவின் வழக்கம். அதற்கு அடுத்தபடியாக, நாடகம் நடத்துபவர்களுக்கும் மற்றவர்களுக்கும் படித்துக்காட்டுவார். அவ்வாறு அவர் படித்துக்காட்டுவதைக் கேட்கவும், காணவும் உற்சாகமாக இருக்கும்.

ஷாவே ஒவ்வொரு பாத்திரமாக மாறி, மாறி நடித்துப் பேசுவதுபோல் இருக்கும்.

நாடகங்களிலே கவர்ச்சி

ஷாவின் குரல் வேறுபாடும், பேசும் முறையும் நாடகத்தின் கருத்தையும் அமைப்பையும் நன்றாக எடுத்துக்காட்டும்.