பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



50

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்


நாள் பொழுதோ அல்லது ஒரு வாரமோ இன்பமாக வாழ முயன்று, சேர்த்ததை எல்லாம் உல்லாசப் பயணத்திலும், உணவு விடுதிகளிலும் செலவு செய்துவிடுகிறார்கள். கிடைக்காமல் கிடைத்திடும் மாறுதலான வாழ்க்கை ஆகையால், அந்தப் பொழுதுபோக்கில் உள்ள துன்பங்களையும், தொல்லைகளையும், ஜன நெருக்கத்தையும், களைப்பையும் பொருட்படுத்தாமல் மகிழ்வதாக நடிக்கிறார்கள்” என்று ஷா கூறுகிறார்.

உண்மையாகவே செல்வந்தர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதனால், அதில் இன்பத்தையோ, உடல் நலத்தையோ உரிமையையோ காண முடியாது என்பது அவரது கருத்து.

பாடுபட்டு உழைத்தவர்

கடந்த பல ஆண்டுகளாக நான் உழைக்க வேண்டிய கட்டாய நிலையில் இல்லை. எனக்கு அத்தகைய பொருளாதாரக் குறையோ, வேறு காரணமோ ஒன்றும் இல்லை. ஆனால் அறிவுள்ள செல்வந்தர்களைப் போல் நானும் பாடுபட்டு உழைத்திருக்கிறேன். ஆயினும், உண்பதிலும், உடுப்பதிலும் என் நிலைமை பழையபடியே இருக்கிறது மாறுதல் எதுவும் இல்லை. என் சட்டைப்பைகள் வறண்டு இருந்த போதும், லண்டன் கடைகளில் ஆடம்பரப்