பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

63


பணம் இருந்தால்தான் வாழ்க்கையில் நிலையான பாதுகாப்பு உண்டு என்றும் சின்னஞ்சிறு தொல்லை களிலிருந்து விடுதலைபெற இயலும் என்றும் அவர் கருதினார்.

அனைவருக்கும் சமமான வருமானம் அமையக்கூடிய சமுதாயத்திலே அவர் வாழ விரும்பினார்.

வருமானம் குறைந்தவர்களுக்கு, வருமானம் மிகுந்தவர்கள் உதவி புரியலாமே என்றால், உதவி பெறுவோர் உதவி அளிப்போருக்குச் சுமையாகவும், தொல்லையாகவும், ஒரளவு பகைவர்களாகவும் கூட மாறுவதால் அதை மிகவும் வெறுத்தார் ஷா.

அறிவாற்றல் மிக்கவர்

எதையும் நுட்பமாகக் காண்பதில் ஷாவுக்கு ஆர்வம் அதிகம்.

ஆய்வுக்கூடங்களுக்குச் சென்று நுண் உயிர்களைப் பூதக்கண்ணாடியின் மூலம் காண்பார்.

இயந்திரங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை ஆராய்வார்.

இசைத்தட்டுக் கருவி, கம்பி இல்லாத தந்தி, கணக்குப் பொறி முதலான எதையும் ஆராயாமல் அவர் விடுவதில்லை.