பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் தம்முடைய அறுபதாவது வயதில் மோட்டார்சைக்கிள் ஒன்று வாங்கி பல மைல் தொலைவு வரையில் அதை ஒட்டிப் பார்த்தார் ஷா, ஷா தொண்ணுற்று நான்கு வயதிலும்கூட தெளிவோடு நாள் தவறாமல் படித்து வந்தார். உணவு வேளையில்கூட புத்தகமும் கையுமாக இருப்பார். கடிதங்களக்குத் தம் கையாலேயே பதில் எழுதினார். கடமைகளை இயந்திரம்போல் தவறாமல் செய்து வந்தார். கவலை இல்லாமல், மகிழ்ச்சி ததும்ப புன்முறுவலோடு திகழ்ந்தார். தள்ளாத வயதிலும் அறிவாற்றல் சிறிதும் தளராதவராக வாழ்ந்தார். தம் அனுபவத்தால் ஆராய்ந்து, உணவிலும், பயிற்சியிலும் நல்ல முறைகளைத் தவறாமல் கையாண்டார். முதியவயதிலும்கூடதவறாமல் கண்களை நீரில் கழுவிக் காத்து வந்தார். அதனால் மங்காத பார்வை பெற்றிருந்தார். இப்படியாக, ஒவ்வொரு சிறிய பழக்கத்தையும் ஆராய்ந்து தெளிந்து நன்மை கடைப்பிடித்து, உடலைப் பேணி வந்தார். அதனால் அவருடைய அறிவும், ஆற்றலும் முதுமையிலும் கெடாமல் இருந்து வந்தன.