பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் 65 கடமை தவறாதவர் ஒரு சமயம், லண்டனில் இருந்த வீட்டில் தடுமாறி விழுந்து கால் அடிபட்டுக் கிடந்தார் ஷா. அப்பொழுது அவருக்காக நடைபெற்ற ஒரு சிறப்பு கூட்டத்துக்கு அவரால் போக இயலவில்லை. அதனால் அவருடைய சொற்பொழிவை ஒலிப்பதிவு செய்து கேட்கச் செய்தார்கள். அதில் ஷா, “என்னைப் போன்ற ஒருவர் தள்ளாமை அடைந்தபோது, ஒரு குறை என்னவென்றால், தலை தடுமாறுவதற்கு முன்னே கால் தடுமாறுகிறது. அதனால், அடிக்கடி கால் தடுக்கிவிழ நேரிடுகிறது” என்று குறிப்பிட்டார். கால்கள் தடுமாறம் நிலை ஏற்பட்டாலும், அறிவு தடுமாறவில்லை. தெளிவாக உணர்ந்து சுவையாய் பேசும் திறமை அவரிடம் திகழ்ந்தது. தம்முடைய சொந்த வாழ்க்கையிலும், உலகத் தொடர்பான வாழ்க்கையிலும் கடமைகளை ஆராய்ந்து இடையறாது உழைத்து வந்தார். அவற்றின் விளைவுகளாகிய நல்ல பயன்களைக் கண்டு மகிழ்ந்து கூத்தாடியதும் இல்லை. ஏமாற்றங்களைக் கண்டும் சோர்ந்து துயரம் அடைந்ததும் இல்லை. 5