பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் ஷாவின் மனைவி 1943ல் இறந்துவிட்டார். அதன்பின் லண்டனிலிருந்து முப்பது மைல் தொலைவிலுள்ள அயாட் லாரன்ஸ் என்னும் சிறிய கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். உற்றார், உறவினர் எவர் துணையும் இல்லை. கவலை இல்லாமல் தன் வாழ்க்கையைத் தாமே கவனித்துக்கொண்டார். அவருடைய அடுத்த வீட்டார் நெருங்கிப் பழகினார்கள். மாலை வேளைகளில் அவர்களுடன் கலந்து உரையாடி மகிழ்ந்தார் ஷா. தவறுகளைத் திருத்துதல் ஷாவின் பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் காணப்படும் கிண்டல், கேலி, இகழ்ச்சி ஆகியவற்றை அவரே அறிவார். அவர் கூறுகிறார்: - “என் தொழிலே இதுதான். உங்கள் நிலைமையை அறிந்து, உங்களை நோக்கி, நீங்களே சிரித்துக்கொள்ளும்படி செய்வதே என் நோக்கம். சில வேளைகளில் உங்களை முட்டாள்கள் என்று உணர்ந்து கொள்ளும்படி செய்திருப்பேனானால், அதனாலேயே உங்கள் தவறுகளைக் களைந்து திருத்தியுள்ளேன் என்று எண்ணிக் கொள்ளுங்கள். பல் மருத்துவர் உங்கள் பல்லைப் பிடுங்கி எறிந்து, பல்நோயைக் குணப்படுத்தவில்லையா? அது போன்றதே இதுவும்” என ஒரு முகவுரையில் ஷா கூறுகிறார்.