பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் 67 ஒழுங்கு முறை ஷாவின் செயலாளர் ஒரு பெண். அவர் லண்டனில் இருந்தார். எழுத வேண்டிய கடிதங்களை ஷா தம் கையாலேயே எழுதி, தாமே தபால் நிலையத்துக்குச் சென்று போட்டுவிட்டு வந்தார். விரிவாக எழுதவேண்டிய கட்டுரை, அறிக்கை, நாடகம் முதலியவற்றை மட்டும் சுருக்கெழுத்தால் எழுதி, லண்டனில் இருக்கும் செயலாளருக்கு அனுப்புவார். அவற்றை அந்தச் செயலாளர் டைப் அடித்து அனுப்பியபின் ஒருமுறை சரிபார்த்து, அச்சுக்கு அனுப்புவார். முப்பது ஆண்டுகளாக ஷாவிடம் செயலாளராக இருந்து, அவரிடம் அலுவல் பார்த்து வந்த பெண், "ஒரு கடிதமாவது அல்லது ஒரு நாடகமாவது நேரில் இருந்து சொல்லக்கேட்டு எழுதும் வாய்ப்பு எப்பொழுதுமே எனக்கு இருந்ததில்லை"என்று கூறுகிறார். நானே அறிவாளி பிரசித்தி பெற்ற நாடக ஆசிரியர் சேக்ஸ்பியரைக் குறைகூறிக் கொண்டிருப்பது பெர்னார்ட்ஷாவின் வழக்கம். “பிரசித்திபெற்ற ஷேக்ஸ்பியரை இவ்வாறு குறை கூறலாமா?” என்று ஒருவர் கேட்டார்.