பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் "இந்த உண்மைய ஆராயக்கூடிய திறமை யாருக்கு உண்டோ, அவரிடமே இதைக் கேட்கவேண்டும். அப்படிப் பார்த்தால், இங்கிலாந்தின் மிகச் சிறந்த அறிவாளியிடம் செல்ல வேண்டும். ஆனால், அத்தகைய அறிவாளி நான்தான்!” என்றார் ஷா. கிராம வாழ்க்கை இவ்வளவு சீராக தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அந்தச் சிறு கிராமத்தில் முதுமையில் தனியாக' அமைதியோடு வாழ்ந்து வந்தார். ஷா, அந்த அயாட் லாரன்ஸ் என்னும் கிராமத்தை எப்படி தேர்ந்தெடுத்தார்? அதற்கான காரணத்தை அவர் கூறுகிறார்: அந்தக் கிராமத்துக்கு ஒருமுறை ஷா சென்று சுற்றிப் பார்த்தபோது அங்கே இருந்த ஒரு கல்லறையில் “ஜேன் எவரஸ்லே-பிறப்பு:1815 இறப்பு:1895-குறுகிய வாழ்நாள்” என்று பொறித்திருந்ததைக் கண்டார். எண்பது ஆண்டுகள் வாழ்ந்து, மரணம் அடைந்த ஒருவர் குறுகிய வாழ்நாள் பெற்றவராகக் கருதப்படும் இடமே தமக்குத் தகுதியான இடம் என்று உணர்ந்து, உடனே அங்கே சென்று வாழத் தீர்மானித்தார்.