பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் 69 பிறந்த நாள் விழா ஷாவின் பிறந்தநாள் 1950, ஜூலை 26, அதுவே அவருடைய கடைசிப் பிறந்தநாளாக ஆகியது. அதாவது 94வது பிறந்த நாள்! வழக்கம்போல் தம்முடைய பிறந்தநாள் விழா கொண்டாடுவதை அவர் உறுதியாக மறுத்தார். ஆனாலும் அன்பர்கள் அந்த விழாவைக் கொண்டாடினார்கள். “ என் பிறந்த நாட்கள் எனக்கு மிகக் கொடியவை ஆகும். அதைப்பற்றி பலவாறு எனக்கு விடாமல் நினைவூட்டுபவர்கள் என்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக்கு வெறுத்துப் பகைக்கும்படியாகச் செய்து விடுகிறார்கள்” என தம்முடைய நண்பர் ஒருவருக்கு எழுதினார் ஷா. . தம் பிறந்தநாளைக் கொண்டாடாமல் இருக்குமாறும் தமக்கு நினைவுபடுத்தாமல் இருக்கும்படியும், பரிசுகளை அனுப்பாமல் தடுப்பதற்கும் அச்சிட்ட வேண்டுகோளை தனக்குத் தெரிந்தவர்களுக்கு எல்லாம் முன்னதாகவே அனுப்பியிருந்தார். அப்படியிருந்தும் ஏராளமான பரிசுகள் வந்து குவிந்தன. பரிசுகளைப் பெற்றுக் கொண்டதற்கு ஷா எப்பொழுதும் நன்றிக் கடிதங்கள் எழுதும் வழக்கம் இல்லை. பரிசுப்