பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் பொருட்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவதே அவருடைய வழக்கம். விபத்தும் சிகிச்சையும் ஷா பல தடவை கால் தடுக்கி விழுந்திருக்கிறார், ஆயினும் 1950 செப்டம்பர் 11ல் தோட்டத்தில் உலாவும்போது இறுதியாக தடுக்கி விழுந்தார். தொடை எலும்பு முறிந்தது. மருத்துவமனைக்கு உடனே எடுத்துச் செல்லப்பட்டார். அறுவை சிகிச்சை நடைபெற்றது. மருத்துவமனைக்குச் செல்லும்போது கூட சிறந்த சில நூல்களைப் பொறுக்கி எடுத்துச் சென்றிருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, படுக்கையில் : கிடந்தபோது, அவருடைய கூரிய அறிவும், நாடகக் கலையின் நுட்ப உணர்வும் தளரவில்லை. அரிஸ்டாட்டிலைப் பற்றியும், செயின்ட் ஜோனைப் பற்றியும், தம்மைப் பற்றியும் மருத்துவமனையில் டாக்டர்களிடததில் சொற்பொழிவு செய்துகொண்டிருந்தார். 1950 அக்டோபர் 4ல் ஷாவின் விருப்பப்படி, மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டார்.