பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் 71 ஷா இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன், தாம் எழுதத் தொடங்கிய ஒரு நாடகத்தை இனி முடிக்கப் போவதில்லை எனத் தெரிவித்தார். ஷாவின் மனைவி இறக்குமுன் அஸ்டார் அம்மையாரிடம் தன் கணவரைக் கவனித்துக் கொள்ளும்படி வேண்டிக்கொண்டிருந்தார். அதன்படி அஸ்டார் அம்மையார் ஷாவின் இறுதி நாட்களில் வந்து தங்கியிருந்தார். சிரமம் எதற்கு? - ஷா நோயுற்றிருக்கும்போது, பத்திரிகை நிருபர்கள் அவரை அணுகி, “உங்களுக்கு என்ன நோய் என்பதை பொதுமக்கள் அறிய விரும்புகின்றனர்”என்று கேட்டனர். “ஏன் இவ்வளவு சிரமம்? ஷா இறந்துவிட்டதாகச் சொல்லிவிடுங்கள். அதனால் எனக்கு எவ்வளவோ தொல்லைகளை குறையும்” என்றார் ஷா, குறைகளே தென்படும் இர்விங் என்னும் நாடகக் கலைஞர், இப்ஸனின் நாடகங்களைப் புறக்கணித்துவிட்டு, ஷேக்ஸ்பியரின் நாடகங்களையே புகழ்ந்து அரங்கில் நடித்து வந்தார்.