பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் இப்ஸனின் மீது ஷாவுக்கு அளவற்ற பிரியம் உண்டு. ஆகையால், மக்களின் மத்தியில் நாடகக் கலைஞர் இர்விங்குக்கு எதிர்ப்பு உண்டாக்கக் கருதி, அவரை இகழ்ந்தும், இப்ஸனைப் புகழ்ந்தும் எழுத நேர்ந்த இடங்களில் எல்லாம் ஷேக்ஸ்பியரையும் குறைகூறி ஒதுக்க முற்பட்டார். ஆனால் ஷேக்ஸ்பியரின் கவிதைத் திறனையும் கலை உணர்ச்சியையும் பாராட்டிக் கூறிய கருத்துக்களை மக்கள் மறந்துவிட்டு ஷா கூறிய குறைகளை மட்டுமே மனத்தில் கொண்டார்கள். நாடகத்துக்கு உரிமைத் தொகை எழுத்தின் மூலம் நிறையச் சம்பாதித்தார் ஷா. உலகில் எந்த மூலையில் அவருடைய நாடகம் நிகழ்ந்தாலும், தமக்குச் சேரவேண்டிய உரிமைத் தொகையை வாங்கத் தயங்கமாட்டார். பண விஷயத்தில் ஒரு காசைக் கூட அவர் விட்டுக் கொடுப்பதில்லை. அவ்வளவு கண்டிப்பானவர். யாரும் அவரை ஏமாற்றிவிடவும் முடியாது. நூல் நிலையம் ஒரு சமயம் ஷா தம்முடைய நூல் நிலையத்தை விற்றுவிடத் தீர்மானித்தார். அவ்வளவுதான், அதற்கு ஏகப்பட்ட கிராக்கி உண்டாகி விட்டது.