பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் 73 ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு ஷா கேட்கும் விலையைச் கொடுத்து வாங்கத் தயாராகி விட்டார்கள். ஷா படித்த புத்தகங்களில் ஆங்காங்கே தம்முடைய கருத்தைக் கோடிட்டு குறிப்பிட்டிருப்பாராம். அதுவும் ஒரு புதுமைதானே! சுறுசுறுப்பு ஷாவின் தோட்டத்தில் இருந்த தேன்கூட்டைப் பழுது பார்ப்பதற்காகச் சென்றார். திருமதி பெல்லா லைத் என்பவர். “தேன்கூடு இருக்கும் இடத்தைக் காண்பிப்பதற்காக ஷா விறுவிறு என்று நடந்து வந்தார். 93 வயதில் அவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தார்”என்று கூறுகிறார் பெல்லாலைத் அவருடைய விருப்பம் ஷா மது அருந்துவது இல்லை, புலால் உண்பதில்லை, சுருட்டு புகைப்பது இல்லை தோட்டத்தில் விளையும் காய்கறிகளையே பயன்படுத்தவார். இயற்கை உணவுகளையே பெரிதும் விரும்புவார்ர். இயற்கைச்சிகிச்சை முறைகளிலே மிகவும் ஆர்வம் கொண்டவர். ஒலி, உச்சரிப்பு முறை, ஆண்-பெண் கூட்டு வாக்குரிமை இவற்றை ஆதரிக்கிறவர்.