பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் திரும்பி வந்துள்ளன ஆரம்ப எழுத்தாளர்களின் கதை, கட்டுரைகளை, “பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்” என்ற முத்திரையைக் குத்தி, திருப்பி அனுப்பிவிடுவது சில பத்திரிகை ஆசிரியர்களின் வழக்கம். ஷாவின் கதை, கட்டுரைகளும் ஆரம்பகாலத்தில் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படாமல் நிறைய திரும்பி வந்திருக்கின்றனவாம். ஆனால், ஷா அதற்காகச் சோர்ந்து விடவில்லை. - (கதை, கட்டுரையில் கொள்கை முரண்பாடு இருந்தாலும் பத்திரிகையாசிரியர்கள் பிரசுரிப்பதில்லை). தினசரிக் & L_Gö) is) தினமும் ஐந்து பக்கங்கள் எப்படியும் எழுதிவிடுவார் ஷா. அதை ஒரு தினசரிக் கடமையாகவே கொண்டிருந்திருக்கிறார். ஏதோ அசெளகரியத்தால் ஒரு நாள் எழுத இயலாமல் போனால், மறுநாள் அதையும் சேர்த்து எழுதிவிடுவது வழக்கம். -