பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் 75 பழக்கவழக்கம் தமக்கு வரும் கடிதங்களுக்கு உடனுக்கு உடன் பதில் எழுதிவிடுவது அவருடைய பழக்கம். எழுதியக் கடிதங்களை தாமே அஞ்சல் நிலையத்துக்குப் போய், பெட்டியில் போட்டு வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். அலங்கோலமான அறை ஷா தங்கி இருந்த அறை மிகச் சிறியது; கண்ட இடம் எல்லாம் தும்பும், தூசியும் படிந்திருந்தன. எல்லாம் ஒழுங்கு இல்லாமல் கிடந்தன. பகல், இரவு, பனிக்காலம், குளிர்காலம், எதுவானாலும் எப்பொழுதுமே ஜன்னலைத் திறந்தபடியே வைத்திருப்பது ஷாவின் வழக்கம். அதனால் தூசி வெளியிலிருந்து வந்தபடியே இருந்தது. மேஜைமீது குப்பைபோல் தாள்கள் கிடந்தன. வந்த கடிதங்களும், தபால் உறைகளும், பேனாக்களும், செய்தித் தாள்களும் அவற்றோடு கத்திகளும், கரண்டிகளும், பழங்களும் சர்க்கரையும் வெண்ணெயும் கலந்து கிடந்தன. யாராவது அவற்றை ஒழுங்குப்படுத்த முன் வந்திருப்பார்கள். ஆனால், ஷாவின் தாள்களை யாரும் தொடக்கூடாது; எடுக்கவும் கூடாது.