பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் மேஜை, தட்டச்சுப் பொறி, நாற்காலி இவையே அந்த அறையை அடைத்துக் கொண்டிருந்தன. எப்பொழுதாவது ஒருமுறை அதைச் சுத்தப்படுத்தி, ஒழுங்கு செய்வதும் உண்டு. அதற்கு இரண்டு முழு நாட்களின் உழைப்பு வேண்டியிருக்குமாம். அந்த இரண்டு நாட்களே ஷாவின் மூளைக்கு ஒய்வு நாட்கள். ஏதேனும் ஒரு புத்தகத்தை ஷா படிப்பதாக இருந்தால் அந்தப் புத்தகம் திறந்தபடியே மேஜை மீது இருக்கும். அவர் உடை அணியும் போதும் அதைக் களையும் போதும், மற்ற சிறு வேலைகளில் ஈடுபடும்போதும், திறந்திருக்கும் பக்கங்களைத் தள்ளித் தள்ளிப் படிப்பாராம். அதைப் படித்து முடித்த பிறகே அந்தப் புத்தகம் மூடப்படும். அதற்கு மத்தியில் வேறு ஒரு புத்தகத்தைப் படிப்பதானால் அதுவும் கூட அருகில் திறந்து வைக்கப்பட்டிருக்கும், இப்படியாக, பல புத்தகங்கள் மேஜைமீது திறந்தவாறு தூசு படிந்தபடியே கிடக்கும். அளவற்ற மகிழ்ச்சி ஒரு நாடகத்தை பல வாரங்கள் தொடர்ந்து நடத்தி, கடைசியில் கூட்டம் குறைந்து வருமானத்தையும் இழந்து, புகழையும் குறைத்துக் கொள்வது ஷாவுக்குப்பிடிக்காது.