பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் 77 சில வாரங்கள் மட்டுமே நாடகத்தை நடத்தி, அரங்கு நிறைந்திருப்பதைக் காண்பதில் ஷாவுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாகுமாம். அதிலும், இடம் இல்லை என்று திரும்பிச் செல்வோரைக் காண்பதில் ஷா மிகவும் மகிழ்ச்சி அடைவாராம். பிரார்த்தனை ஷாவுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை. விக்கிரக வழிபாட்டை வெறுப்பவர். ஆனால், பிரார்த்தனையின் அவசியத்தை மட்டும் உணர்ந்திருந்திருக்கிறார். சொல்லுக்கு மதிப்பு பிரச்சாரம் செய்வதில் ஷா நிபுணர். அவர் சொல்லுக்கு வெல்லும் திறன் உண்டு என்பது உலகறிந்த உண்மை. W.H. டேவிஸ் என்னும் கவிஞரைப் பற்றிப் புகழ்ந்து பிரபலப்படுத்தி அவரைக் கைதுக்கிவிட்டார் ஷா. கண்டித்தார் ஷாவுக்கு இந்தியாவின்மீதும் காந்தியடிகளிடத்திலும் மிகுந்த அன்பு உண்டு.