பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் இந்தியாவில் 1942 ஆகஸ்ட்டில் நிகழ்ந்த புரட்சியின் போது, இங்கிலாந்தில் பிரதம மந்திரியாயிருந்த வின்ஸ்டன் சர்ச்சில், இந்தியாவில் நடத்திய அடக்குமுறைக் கொடுமையை மிகவும் கடுமையாகக் கண்டித்து எழுதிய உலகப்பிரமுகர்களில் ஷாவும் ஒருவர். பிரமாத விற்பனை சாமுவேல் பட்லர் என்னும் எழுத்தாளர் பிரபலம் ஆகாமலும், அவருடைய நூல்கள் விற்பனை மந்தமாகவும் இருந்ததால் அவர் வறுமையில் வாடினார். ஷா, அவருக்கு அளித்த ஆதரவினால், சாமுவேல் பட்லருடைய நூல்கள் பிரமாதமான விற்பனை ஆயின. உச்ச நிலையில் இருப்பவர் ஷாவினுடைய சூழ்நிலையே தனிப்போக்குடையது. அவர் பேசத் தொடங்கிவிட்டால், பிரம்மாண்டமான உலகப் பிரச்சினைகள் யாவும் ஏதோ குடும்பத் தகராறுகளைப் போல மாறிவிடும். அவ்வப்போது வரலாற்று நாயகர்களாக விளங்கும் பெரிய பெரிய தலைவர்கள் எல்லோரும் அவர் முன்னே சின்னஞ் சிறு பள்ளிப் பிள்ளைகளைப் போல் ஆகிவிடுவார்கள். அத்தகைய எட்டாத உயரத்தில் அமர்ந்து பேசுவார் அவர்.