பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் 79 பசுமையும் புதுமையும் ஷா வாழ்ந்திருந்த கிராமம், 500 ஆண்டுகளுக்கு மேலாக, எவ்வித மாற்றமும் அடையாமல்தான் இருந்தது. ஷா அடிக்கடி தெருக்களில் உலாவிக்கொண்டு இருக்கையில், செடி கொடிகளின் பசுமை நிறைந்த காட்சிகளை நின்று பார்த்துக் கொண்டிருப்பார். அந்த கிராமத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, அவர் வாழ்ந்து வந்திருக்கிறார். அப்படியும் அங்கு உள்ள ஒவ்வொன்றிலும் ஏதாவது அதிசயத்தையோ, புதுமையையோ கண்டுகளித்தபடியே இருப்பார். பழமையானக் கட்டிடங்களைப் படம் பிடிப்பார். புகழைக் கண்டு மயங்காதவர் தமக்கு உண்டான உலகப் புகழைக் கண்டு ஒருபோதும் மயங்காதவர் ஷா. ஷாவின் தன்மைகள், செயல்களில் மட்டும் அல்லாமல் எண்ணங்களில், எழுத்துக்களில் மாறுபட்டு, பொதுமக்களின் சிந்தனைக்கு எட்டாமல் காணப்பட்டார் அவர். ஷாவின் 90-வது பிறந்த நாள் காலையில், பத்திரிகையாளர் மற்றும்பலர் அவருக்குவாழ்த்துக்கூற, அவர் வாழ்ந்த கிராமத்துக்கு வந்து காத்திருந்தனர்.