பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் ஷா வழக்கம் போல் காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டார்; செய்தித்தாள்களைப் படித்தார். வெளியே வந்து எல்லோரையும் புன்முறுவலோடு பார்த்தார். - х அப்படியே அங்கிருந்தவர்களை விலக்கிக்கொண்டு தம்முடைய ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஏறி, ஒட்டுநரின் அருகில் அமர்ந்து எங்கோ மலைப்பக்கமாகச் சென்று விட்டார். அவருடைய வீட்டிலிருந்த எவருக்குமே ஷா தம்முடைய வயதைப் பற்றிச் சொல்லவில்லையாம். அந்தக் கிராமத்திலிருந்த பெண்களும், குழந்தைகளும் கை நிறைய மலர்களைக் கொண்டு வந்து ஷாவின் பிறந்த நாளை வாழ்த்திப் பாடுவதற்காகக் கூடியிருந்தார்கள். ஆனால், ஷாவோ அவர்களுக்கு அகப்படாமல் எங்கோ சுற்றிக் கொண்டிருந்தார். அறையில் கண்ட காட்சி சார்லஸ் என்பவர் ஷா வாழ்ந்து வந்த கிராமத்திலுள்ள இல்லத்துக்குச் சென்றார். அவர் கண்ட காட்சியைக் கூறுகிறார். “பக்கத்து அறையை எட்டிப் பார்த்தேன்; ஷா தொப்பியையோ, மூக்குக் கண்ணாடியையோ கழற்றாமல்,