பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் 81 மார்பில் கைகளை வைத்துக்கொண்டு படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். "அறையின் உள்ளே வைக்கோல் திணிக்கப்பட்ட இரண்டு ஆந்தை உருவங்கள், ஷேக்ஸ்பியரின் பளிங்கு உருவச்சிலை; பிரெஞ்சு நாட்டின் வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க்கின் வெண்கலச்சிலை ஆகியன காணப்பட்டன. மற்றும் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் மாவட்டங்களின் படங்களும் தொங்கவிடப்பட்டிருந்தன. ஷாவின் நூல்களின் முதல்பதிப்புப் பிரதிகள் சிலவும் அங்கே காணப்பட்டன” ஷாவுக்குக் கிடைத்த கெளரவம் இருபத்தைந்து உலகப் பிரமுகர்களின் பட்டியல் ஒன்றை மேல்நாட்டு ஆசிரியர் ஒருவர் தயாரித்து, பிரபலமான பத்திரிகை ஒன்றில் வெளியிட்டார். பெரும் பதவி வகித்தவர்; பெருந்தன்மை வாய்ந்தவர்; உலகிலேயே தைரியசாலியான ஆகாய விமானி, குபேரர்; அன்பு நிறைந்தவர்; சோகம் நிறைந்தவர்; நீதிமான், விகட நிபுணர் இப்படியாக பிரபலமானவர் பெயர்கள் வெளியிடப்பட்டன. - அந்த உலகப் பிரமுகர்களின் பட்டியலில், "வீண் பெருமைக்குப் பெயர் பெற்றவர் பெர்னார்ட்ஷா” “பெரும்