பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் பணிவுக்குப் பெயர் பெற்றவர் மகாத்மா காந்தி” என்று காணப்படுகிறது. - சகலகலா வல்லவர் நாவலாசிரியர், நாடக ஆசிரியர், இலக்கிய விமர்சகர், அரசியல் அறிஞர், சமூகப் புரட்சியாளர், தத்துவ ஞானி, தொழிலாளர் சிந்தனைத் தலைவர், உரிமைப் போரின் அறிவுத் தளபதி, இவ்வாறு ஒவ்வொரு துறையும் அவரை தனக்கே உரியவர் என்றும் பாராட்டியது; வரவேற்றது; உரிமை கொண்டாடியது. - - இலவச பாஸ் நாடக அரங்கில் கூட்டம் நிறைய வேண்டும் என்பதற்காகவோ, விளம்பரப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ நல்ல மதிப்புரை கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ சிலருக்கு இலவசபாஸ் அனுப்பி நாடகம் பார்க்கச் செய்யும் முறையை ஷா மிகவும் கண்டிப்பார். கூர்மையான பார்வை ஷாவின் எழுத்துக்களில் காணப்படும் வேறுபாட்டையும், பொருத்தமற்றதையும் குறைகூறுவோர்க்கு ஷா பதில் கூறுகிறார்: