பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் 83 “என் கண்களைப் பரிசோதனை செய்த கண் மருத்துவர் அளவான நிலையில்தான் இருக்கிறது”என்றார். "அப்படியானால் என்னுடைய கண்கள், மற்றவர்களின் கண்களைப் போல இருப்பதாகவே கருதுகிறேன்” என்றார் ஷா. கண் மருத்துவர் அதை மறுத்து, "இல்லை, இல்லை மற்றவர்களின் கண்கள் பெரும்பாலும் இவ்வாறு இருப்பதில்லை. உங்களுடைய கண்கள் தனி ரகமானவை. மிக நல்ல கண்பார்வை இருக்கிறது. அளவான நிலை என்றால் பொருள்களை, உள்ளது உள்ளபடியே பார்த்து அறியும் ஆற்றல் நூற்றுக்குப்பத்துப்பேருக்குத்தான் உண்டு” எனறாா. அதைக் குறிப்பிட்டு, "அப்பொழுதுதான், நான் கற்பனைகளை எழுதி வெற்றி பெறாததன் காரணத்தை உணர்ந்தேன். என் முகத்திலுள்ள கண்ணைப்போலவே, என் மனக்கண்ணும் (கற்பனைக்கண்) அளவான நிலையில் இருக்கிறது. பெரும் பாலானவர்களுக்கு மனக்கண்ணும் கெட்டுப்போயிருக்கிறது. அதனால்தான், உலகத்தை கண்டு தான் அறியும் முறை அவர்களுக்குப்பிடிக்கவில்லை” என்று கூறுகிறார் ஷா.