பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

இவ்வாறு விந்தணு உள்ளே சென்ற அண்டத்தைப் பூரித்த அண்டம் என்கிறோம். பூரித்தவுடன் அது பல வகையான மாறுதல்களை அடைய ஆரம்பிக்கிறது.

கருவடைந்த அண்டம் சுமார் ஏழெட்டு நாட்கள் வரை மெதுவாக நகர்ந்து கருப்பையை அடைகிறது. ஆனால் அதற்குள்ளே அது பிரிய ஆரம்பித்துக் கருப்பையைச் சேர்வதற்குள் நூற்றுக்கணக்கான அணுக்களாகி அவையெல்லாம் திரண்ட ஒரு பிழம்பு என்று சொல்லும்படியாய் மாறிவிடுகின்றன.

பூரித்த அண்டம் முதலில் இரண்டாகவும் பின்பு நான்காகவும் நான்கு எட்டாகவும் இவ்வாறு பிரிவதோடு ஓர் ஒழுங்காக அமைந்து பந்துபோலத் திரண்டு கருப்பையை அடைகிறது. அங்கே அது ஓர் இடத்தில் ஒட்டிக்கொண்டு, பின்பு தாயின் இரத்தத்தைக் கொண்டு வளர ஆரம்பிக்கிறது.

 

5. நிறக்கோல்கள்

பூரித்த அண்டம் பிரிந்து பிரிந்து ஆயிரக்கணக்கான அணுக்களாகி அது காரணமாக உடம்பு வளர்ச்சி அடைகிறது. ஒவ்வோர் அணுவிலும் நிறக்கோல்கள்