பக்கம்:பேசாத நாள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசாத காள் 5

இறைவனைப் பேசும் பேச்சே பேச்சு. அந்தப் பேச்சைப் பேசும் நாளே வாழும் நாள்; அல்லாத நாள் வாழாத நாள்: பிறவாத நாள். -

அரியானே அந்தணர்தம் சிந்தை யானே

அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும் தெரியாத தத்துவனத் தேனைப் பாலத்

திகழ்ஒளியைத் தேவர்கள்தம் கோனே மற்றைக் கரியானே நான்முகனைக் கனலைக் காற்றைக்

கனகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானப் பெரும்பற்றப் புலியூ ரானைப் -

பேசாத நாள்ளல்லாம் பிறவா நாளே.

| உணர்வதற்கு அருமையானவனே, அந்தணருடைய சிங்தையில் கியானப் பொருளாய் இருப்பவனே, அரிய வேதத்தின் உட்பொருளாய் உள்ளவனே, எத்தகைய வன்மை உடைய வருக்கும் தெரியாத இயல்புடையவனே, தன்னே அடைந்தவர் களுக்குத் தே&னப் போலவும் பாலைப் போலவும் இனிய பொருளாய் இருப்பவனே, விளங்குகின்ற சோதியை, தேவர் களுக்கு அரசகை உள்ளவனே, கரிய நிறமுள்ள திருமாலாக இருப்பவனே, நான்முகனக விளங்குபவனே, கனலாகவும் காற்ரு கவும் ஒலிக்கின்ற கடலாகவும் பெருமையையுடைய மலையாகவும் எங்கும் கலந்து நிற்கும் பெரிய பெருமானே, பெரும்பற்றப் புலியூ ராகிய கில்லையில் உள்ளவனைப் பேசாத நாட்கள் எல்லாம் பிற வாத நாட்களே ஆகும். - மற்றை - மேலே சொன்ன பொருளன்றி வேருகிய.

கரியான். திருமால். கனே. ஒலிக்கும்.)

கனல் முதலிய நான்காலும் நான்கு பூதங்களே உணர்த்திப் பெரும் பற்றப் புலியூரான் என்பதல்ை ஆகாசத்தையும் பெற வைத்தார்.

இப்பாடல் ஆரும் திருமுறையின் முதல் திகத்தில் உள்ள முதல் திருத்தாண்டகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/11&oldid=610069" இலிருந்து மீள்விக்கப்பட்டது