பக்கம்:பேசாத நாள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவடிச் சிறப்பு

சிவபெருமானுடைய அடியைப் பாடுவதில் அடியவர் களுக்கு ஆனந்தம் அதிகம். அவனுடைய திருவடியே பற்றுக்கோடென்று கிடப்பவர்களாதலின் அதன் அழகை யும் ஆற்றலையும் டெருமையையும் கினேந்து கினேந்து இன்ப ஊற்றெழக் களித்திருப்பார்கள். திருநாவுக்கரசர் ஒரு திருத் தாண்டகப் பதிகம் முழுவதிலும் திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானுடைய திருவடியைப் பாராட்டியிருக்கிருர், அப்பதிகத்துக்குத் திருவடித் திருத்தாண்டகம் என்று பெயர் வைத்து வழங்குவர்.

- சிவபெருமானுடைய திருவடியை நினைக்கும்போதே இன்பம் மல்குகிறது. அதன் மனம் உள்ளத்தே மணக் கிறது.

நறுமலராய் தாறும் மலர்ச் சேவடி

என்று ஆர்வத்தோடு சொல்கிருர் அப்பர். நறுமலர் என்ருலே மணமும் மலரும் இருக்கின்றன. அவருடைய அன்பு பெருகுகிறது. அப்படிச் சொல்வதோடு கில்லாமல் காறும் மலர்ச் சேவடி என்று பின்னும் வற்புறுத்திச் சொல்கிருர். தலையால் வணங்குவார் முடிமிசையே திகழும் மலர் அது சிங்தையால் நினைப்பார் உள்ளே மனக்கும் நறுமலர் அது. - -

நறுமலர் போல் மணமல்கும் அந்தத் திருவடி அன்பர்கள் உள்ளக் கமலத்தில் மெத்தென்று எழுந்தருளி யிருந்தாலும் அதன் வல்லபத்தை என்னவென்று சொல்வது!. உலகத்தையெல்லாம் இயங்கும்படி செய்கிறது. அந்த அடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/12&oldid=610070" இலிருந்து மீள்விக்கப்பட்டது