பக்கம்:பேசாத நாள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவடிச் சிறப்பு 7 தான் கடந்து உலகத்தை நடத்துகிறது. எந்த எந்தக் காலத்தில் எவ்வெப் பொருள்கள் எவ்வெவ்வாறு தோன்றி இயங்கவேண்டுமோ அவ்வவ்வாறு நடைபெறும்படி செய்யும் ஆற்றலே உடைய அடி அது. உலகத்தை நடாத்தும் அரசன் நடுநிலையில் கின்று கலம் செய்தாரை நாட்டியும் தீமை செய்தாரை வீட்டியும் ஆட்சி புரிவதுபோல இறைவன் திருவடியும் நடுகிலேயில் கின்று எல்லாவற்றையும் கடத்துகிறது.

நடுவாய் உலகம் நடாய அடி * - - உலகத்தை நடத்தும் பொறுப்பை மேற்கொண்டதாக லால் உலகம் விளங்குவதற்கு வேண்டிய பொருள்களே அமைக்கும் ஆற்றலும் அதற்கு உண்டு. உலகத்தைத் தம் ஒளியால் விளக்கும் கதிரவனும் திங்களுமாக நிற்ப இறைவன் திருவடிதான். - *

செறிகதிரும் திங்களுமாய் நின்ற அடி. சுடர்கள் மூன்று. அவை சூரியன் சந்திரன் அக்கினி என்பவை, சூரியனும் சந்திரனும் பூமிக்குப் புறம்பே கின்று ஒளி தருகின்றன. அக்கினியோ நிலத்தின் எல்லேக்குள்ளே நெருப்பாகவும் விளக்காகவும் இருந்து பயன் தருகிறது. கதிரும் திங்களும் கிலத்துக்கு வெளியே திகழும் ஒளிகள். இத்திரளோ உள்ளே திகழ்வது. அப்படித் திகழும் தீயும் இறைவனுடைய திருவடிதான். . . . - - தித்திரளாப் உள்ளே நிகழ்ந்த «31թ.

சூரியசந்திராக்கினிகளாக நிற்கும் திருவடி அக் கதிர்களின் மாசினேப் போக்கும் தன்மை உடையது. * கடுவாய் உலகம்நாட்ாய அடி' என்பது ஒரு பாடம். எல்லா

வற்றிற்கும் நடுகிலேயில் இருந்து உலகமாகவும் அகில் உள்ள நாடுகளாகவும் ஆன அடி என்று பொருள் கொள்ளவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/13&oldid=610071" இலிருந்து மீள்விக்கப்பட்டது