பக்கம்:பேசாத நாள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பேசாத நாள்

வீட்டில் விளக்கை ஏற்றுபவன் அதைத் துடைத்துச் சுத்தமாக்குவதுபோல மூன்று கதிரில் களங்கத்தையுடைய தாகிய சந்திரனே இறைவன் தன் திருவடியால் மாசு. நீக்கினன். தக்க யாக சங்கார காலத்தில் மதியைத் தன் திருவடியால் தேய்த்தான். திருவடியின் தொடர்பு எந்த வகையில் கிடைத்தாலும் மாசு தீர்வது உறுதியாதலால் சக்திரனுக்கு இருந்த குறை போயிற்று. அது இறை வனுடைய திருமுடிக் கண் அணியாக விளங்குகின்றது.

மறுமதியை மாசு கழுவும் அடி. - புறத்தே தோன்றும் இருளேப் போக்க மூன்று சுடர் களாகத் திருவடி இருக்கிறது என்ருர். இந்தச் சுடர்களால் போகாத இருள் வேறு ஒன்று உண்டு. அது அகவிரு ளாகிய அறியாமை; அஞ்ஞானம், அதனைப் போக்க வேதமும் ஆகமமும் உதவுகின்றன. வேதத்தை மந்திர மென்றும் ஆகமத்தைத் தந்திரமென்றும் கூறுவது வழக்கம். புற இருளே நீக்கும் முச்சுடராக கிற்பது போலவே அகவிருக்ளப் போக்கும் வேதாகமங்களாக கின்று நிலவுகிறது இறைவன் திருவடி

மந்திரமும் தந்திரமும் ஆய அடி.

இப்படியெல்லாம் விளங்கும் திருவடியை உடையவன் சிவபெருமான், அவன் கெடில நதியின் கரையிலே திரு வதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கிருன். வளஞ் செறிந்த கெடில நதி பாயும் நாட்டுக்குத் தலைவனும், திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் செல்வனு மாகிய சிவபெருமானுடைய திருவடி அழகும் ஆட்சியும் ஒளி தரும் ஆற்றலும் உடையது என்று பாடுகிருர் திருநாவுக்கரசர். . . - - . .

நறுமலராய் தாறும் மலர்ச்சே வடி

நடுவர்ய் உலகம் நடாய அடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/14&oldid=610072" இலிருந்து மீள்விக்கப்பட்டது