பக்கம்:பேசாத நாள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவடிச் சிறப்பு 9

செறிகதிரும் திங்களுமாய் நின்ற அடி

தித்திரளாய் உள்ளே திகழ்ந்த அடி

மறுமதியை மாசு கழுவும் அடி

மந்திரமும் தந்திரமும் ஆய அடி

செறிகெடில நாடர் பெருமான் அடி

திருவிரட் டானத்தெம் செல்வன் அடி.

(நறிய மலராகிய மணம் வீசும் மலரைப் போன்ற சிவந்த திருவடி, நடுகிலேயில் நிற்பதாய் உலகத்தை நடத்திய கிருவடி; கிரணங்கள் செறிந்த கதிரவனும் திங்களுமாகி நின்ற கிருவடி: தீப்பிழம்பாய் கிலப்பரப்பினுக்குள்ளே விளங்கியதிருவடி, களங் கத்தையுடைய சந்திரனே மாசு மீக்கும் கிருவடி, வேதமும் ஆகமமு மாகிய கிருவடி; வளம் செறிந்த கெடில நாட்டுத்தலைவன் திரு வடி திருவகிகை வீரட்டானத்தில் எழுந்தருளி யிருக்கும் எம் முடைய செல்வனது அடி. 魏

பெருமானடி, செல்வன் அடி இத்தகையது என்று கூட்டிப் பொருள் செய்ய வேண்டும்.

மலர்ச் சேவடி - பொலிவையுடைய சிவந்த அடி என்றும் பொருள் கூறலாம். நடாய - நடக்கிய, கடப்பன கடாஅய்' என்பது திருவாசகம். கதிர் . சூரியன். கீத்திரள் . இப்பிழம்பு. மறு களங்கம். கழுவும் . போக்கும். மந்திரம் . வேதம். தந்திரம் - ஆகமம். செல்வன் . அருட் செல்வத்தை உடையவன்; எல்லாச் செல்வத்தையும் உடையவன் என்றும் சொல்லாம்.)

மலராய் அடியார் உள்ளத்தே மலர்ந்து மணந்து, கடுகின்ற ஆணைப் பொருளாய் உலகை கடத்தி, சுடர் களாய் ஒளி தந்து புறவிருளே நீக்கி, வேதாகமங்களாய் கின்று அகவிருளேப் போக்குவது இறைவன் திருவடி என்பது இதன் திரண்ட பொருள். -

இது ஆரும் திருமுறையில் ஆரும் திருப்பதிகத்தில் எட்டாவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/15&oldid=610073" இலிருந்து மீள்விக்கப்பட்டது