பக்கம்:பேசாத நாள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணில் உள்ளவன்

“இறைவன் எங்கே இருக்கிருன்? அவனேக் காண முடியுமா?’ என்று கேட்கிறது மனம் - 'உன்னிடத்திலே இருக்கிருன். உனக்குத் தெரியா மலே ஒளிந்து நிற்கிருன்” என்கிருர் அப்பர். -

"எனக்குத் தெரியவில்லையே! எனக்குள்ளே உள்ள தைக் காண்பது அரிதுதான். எனக்கு அயலாக உள்ள . இடத்தில் இருந்தால் காண்பது எளிது. அப்படி எங்கே 'யாவது இருக்கிருன?’ என்று உசாவுகிறது. மனம்.

“எத்தனையோ இடங்களில் இருக்கிருன். உனக்கு அண்மையிலே இருக்கிருன். வணங்குவதற்குரிய தலையின் மேல் இருக்கிருன். தலை வணங்கிலுைம் வணங்கா விட்டாலும் அதன் மேல் கின்று தலைவனுக என்றும் விளங்குகிறவன் அவன்தான்.” -

மனம் அதையும் தெளிந்து கொள்ளவில்லை. "இன் னும் எனக்கு அருகில் உள்ள எங்காவது இருக்கிருன? என்று கேட்கிறது. - -

'பேசும் வாக்கில் உள்ளான்” என்று விடை வரு கிறது. மனம் வாக்குக் காயம் என்னும் மூன்று காணத் திலும் கலந்து கின்று யாவரையும் இயக்கும் இறைவ லுடைய சிறப்பை அப்பர் சுவாமிகள் அறிவுறுத்தினர், - மனத்தகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான்.

"உன்னில் இருக்கிருன் உன்னைச் சார்ந்த இடங்களில் இருக்கிருன் என்று சொல்லியும் தெரிந்து கொள்ளாத மனத்துக்குப் பின்னும் சொல்லுகிரு.ர். --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/16&oldid=610074" இலிருந்து மீள்விக்கப்பட்டது