பக்கம்:பேசாத நாள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணில் உள்ளவன் 11.

'அருகில் இருக்கிற பொருளின் அருமை தெரியாதது உலகத்தின் இயல்பு. புழைக்கடை மூலிகை மருந்துக்கு உதவாது. அதுவே காட்டில் இருந்தால் அரியது என்று எடுத்து வருவார்கள். உனக்கு அருகில் இறைவன் இருப் பது புலப்படவில்லை என்பது உலகத்தோடு ஒத்த இயல்பு தான். இனி அவன் இருக்கும் வேறு இடங்களே, உனக்கு அயலாகிய இடங்களைச் சொல்கிறேன், கேள்” என்று தொடங்குகிரு.ர். -

"எப்போதும் இறைவனுடைய திருவடிப் புகழை வாய் நிரம்ப வஞ்சகமின்றி கானமின்றிப் பாடுகிற தொண்டர்களே நீ பார்த்திருக்கிருயா? அந்தத் தொண்டர் கூட்டத்திலே அவன் கலந்திருப்பான். அவர்கள் கூட்டத் துக்குள்ளே இருப்பான்."

வாய்ஆரத் தன்அடியே பாடும் தொண்டர் இனத்தகத்தான். "இந்த இனத்தினரும் நம்முடனே தானே இருக் கிருர்களென்று நீ நினைத்துப் புறக்கணிக்கலாம். இந்த உலகத்துக்கு அப்பாலே அவன் இருக்கும் இடத்தைச் சொல்கிறேன். தேவலோகம் தெரியுமா, உனக்கு? அதைப் பற்றிக் கேட்டிருப்பாயே. அங்குள்ள தேவர்களுக்கு இடுக்கண் தீர்க்கும் பெருமான் அவன். அவர்கள் எப்போதும் இறைவனே வணங்கி வழிபட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களுடைய தலையின் மேல் விற்கும் தலைவன் அவன்.” - - - -

இமையவர்தம் சிரத்தின் மேலான்.

மனம் மயங்கி கின்றது. 'உன்னிடம் இருக்கிருன். நீ உள்ள வீடாகிய உடம்பில் வேறு பகுதிகளில் இருக் கிருன். உடம்பு பழகும் ஊரில் உள்ள தொண்டர் கூட் டத்தில் இருக்கிருன் உள்ள உலகத்துக்கு அப்பா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/17&oldid=610075" இலிருந்து மீள்விக்கப்பட்டது