பக்கம்:பேசாத நாள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பேசாத நாள்

லுள்ள தேவலோகத்தில் தலேவகை இருக்கிருன்' என்று இறைவன் வர வரத் தூரத்தில் இருப்பதை உணர்த்தியும், மனம் இன்னும் தூரம், இன்னும் தாரம் என்று எட்டிப் பார்த்தது. - ஒவ்வொன்ருகச் சொல்லிக்கொண்டே போவதற்கும் அளவு இல்லையா? அடுத்தபடி இவ்விடம், அடுத்தபடி இவ்விடம் என்று சொல்லிக்கொண்டே வந்தவர், "உனக் குத் தெரிந்த இடங்களுக்கெல்லாம் அப்பால் இருக்கிருன்” என்று சொல்வி விடுகிருர். 'உன்னுடைய கணக்கிலே அகப்பட்டவை ஏழு உலகம் அண்டம் ஏழு. இறைவன் அவற்றிற்கும் அப்பால் இருப்பவன். அந்த அப்பால் என்பதை எப்படி ப்ேடிக் கொண்டாலும் அங்கெல்லாம் அவன் இருக்கிருன்” என்று மனத்தின் யாத்திரைக்கு முடிவு கட்டி விடுகிருர்.

ஏழ்அண்டத்து அப்பாலான். 'ஏழண்டத்துக்கும் அப்பாற்பட்டவன்' என்று சொன்னவுடன் மனம் தான் அளப்பதற்குரிய அண்டங்களேயெல்லாம் சிந்தித்துப் பார்த்தது. அவற் றிற்கும் அப்பால், அவற்றிற்கும் அப்பால் என்ற இந்தச் சிந்தனே யாத்திரையை முடிவின்றி கடத்திக்கொண்டே இருக்கலாம் அல்லவா? - - இப்போது மனத்துக்கே சலிப்பு வந்துவிட்டது. அப்பால், அப்பால் என்று போய்க்கொண்டிருப்பதில் பயனில்லே என்று கண்டுகொண்டது. வெளியே திரியப் திரிய முயற்சி விரிகிறது; இடம் விரிகிறது; காலம் விரிகிறது லட்சியமும் கைக்கு எட்டாமல் எட்ட எட்டத் போகிறது. உள்ளே நுழைய நுழைய முயற்சி ஆழ்கிறது: இடம் சுருங்குகிறது. காலம் கழுவுகிறது:லட்சியத்துக் குள்ளே ஆழும் கிலே வருகிறது. அப்பால், அப்பால் என்று அகன்று செல்வதில் பயன் இல்லை. இப்பால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/18&oldid=610076" இலிருந்து மீள்விக்கப்பட்டது