பக்கம்:பேசாத நாள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணில் உள்ளவன் 13

இப்பால் என்று ஆழ்ந்து செல்வதில்தான் பயன் உண்டு.

மனத்துக்கு ஓரளவு தெளிவு பிறந்தது. அப்பர் சுவாமிகள் காட்டிய வழியில் மீண்டு வந்தது. இறைவன் ஏழண்டத்துக்கு அப்பாலானவன் ஆலுைம் கருணையில்ை இமையவர் தம் சிரத்தின் மேல் இருப்பவன்; பின்னும் இறங்கி வந்து தொண்டர் இனத்து அகத்தே இருப்பவன்; அதனிலும் அணிமையனுகி வாக்கில் வருவான்; பின்னும் அணியணுகித் தலைமேல் இருப்பான்; பின்னும் அருகே வந்து மனத்தையே கோயிலாகக் கொள்வான். அவ்வளவு சேய்மையில் உள்ளவன் இவ்வளவு அணிமையிலும் இருப் பதற்கு அவன் கருணையே காரணம் என்பதை மனம் உணர்ந்துகொண்டது. .

அப்பால் அப்பால் என்று தாண்டிச் சென்றதை மாற்றி, இப்பால் இப்பால் என்று நெருங்கி வருவதை விரும்பியது. 'இப்பால் எங்கெங்கே இருக்கிருன்?' என்று கேட்டது.

'இப்பால் இருக்கும் இடம் ஒன்ரு, இரண்டா? கிலத்தில் அழகான இடங்களில் எல்லாம் அவன் இருக்கிருன். கிலத்திலே சிறந்த குறிஞ்சியில் அவன் இருக்கிருன். பொன்போன்ற நிறம் படைத்த தினையை விளைவிக்கும் புனத்திலே இருக்கிருன். பொன் நிறம் படைத்த அழகிய கொன்றைப் பூவில் இருக்கிருன்: மலையிலே இருக்கிருன் நெருப்பிலே இருக்கிருன்; காற்றிலே இருக்கிருன் மழை பொழியும் மேகத்தில் இருக்கிருன்" என்கிருர் வாகீசர்.

- - இப்பாற் செம்பொன் புனத்தகத்தான்; நறுங்கொன்றைப்போதின் உள்ளான்

பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றின் உள்ளான் கனத்தகத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/19&oldid=610077" இலிருந்து மீள்விக்கப்பட்டது