பக்கம்:பேசாத நாள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1在 பேசாத காள்

"பொதுவாக இப்படிச் சொன்னல் அவனுக்கு என்று ஒரு விலாசம் இல்லையா?” - -

'உண்டு. அவனைக் கைலாசபதி என்று சொல் வார்கள். அவன் கைலாச மலையின் உச்சியில் இருக்கிருன்.” "கைலாசம் எளிதிலே சென்று தரிசிக்கும் இடமா? மனிதர்கள் கினைத்தால் போய்க் காணுகின்ற இடம் ஒன்றிலும் அவன் இருப்பதில்லையா?”

'உண்டு. வடக்கே உள்ள கைலாசத்துக்குச் சமான மாகத் தெற்கேயும் ஒரு தலம் இருக்கிறது. அதற்குத் திருக்காளத்தி என்று பெயர். அதற்குத் தகதின கைலாசம் என்ற திருகாமமும் வழங்கும்.” -

"மனம் முதலிய கரணங்களில் இருப்பதையும் அடியாரிடம் இருப்பதையும் இன்னும் பல இடங்களிலும் இருப்பதையும் எடுத்துச் சொன்னீர்களே. நீங்கள் அவனே எங்கே கண்டீர்கள்?' என்று மனம் கேட்டது.

"நான் அவனே எங்கும் காண்கிறேன். எதைப் பார்த்தாலும் எங்கே பார்த்தாலும் அதுவாக அங்ே இறைவன் எழுந்தருளியிருக்கிருன்.” -

"எல்லோருக்கும்.அப்படி அவன் புலப்படுவதில்லையே!” 'அவன் என் கண்ணில் இருக்கிருன். அதனல் கண் காணும் இடங்களில் எல்லாம் அவனேயே காண்கிறேன். - - - - கைலாயத் துச்சி உள்ளான், காளத்தி யான், அவன்என் கண்ணு ளானே.

அப்பர் சுவாமிகளின் கண்ணிலே இருக்கும் இறைவன் அவருக்கு எல்லாமாய்த்தோன்றுகிருன்.அப்பாலேக்கும் அப் பாலாக இருக்கும் அவன் இப்பாலும் இருக்கிருன் என்று உணர்த்தியவர் தம் கண்ணுளான் என்று முடிக்கிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/20&oldid=610078" இலிருந்து மீள்விக்கப்பட்டது