பக்கம்:பேசாத நாள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணில் உள்ளவன் 15

மனத்தகத்தான், தலைமேலான், வாக்கின் உள்ளான்,

வாயாரத் தன்அடியே பாடும் தொண்டர் இனத்தகத்தான், இமையவர்தம் சிரத்தின் மேலான்;

ஏழண்டத்து அப்பாலான்; இப்பால் செம்பொன் புனத்தகத்தான், நறுங்கொன்றைப் போதின் உள்ளான்

பொருப்பிடையான், நெருப்பிடையான், காற்றின் உள் கனத்தகத்தான், கயிலாபத்து உச்சி யுள்ளான், (ளான்

காளத்தி யான், அவன்என் கண்ணு ளானே. (மனத்தின் உள்ளே இருப்பவன், தலைக்குமேல் இருப்பவன், பேசும் பேச்சில் உள்ளவன், வாய் கியம்பத் தன் அடியையே புகழ்ந்து பாடும் அடியார்களுடைய கூட்டத்தினுள்ளே இருப் பவன், தேவர்களுடைய தலையின்மேல் அவர்கள் வணங்குவதற் குரிய தலைவனுக இருப்பவன், ஏழு உலகங்களுக்கும் அப்பால் கிற்பவன்; இவற்றை யன்றி நமக்கு அணியனவான இந்தப் பகுதிகளில் சிவந்த பொன் போன்ற கினேயை விளேக்கும் புனத் தினுள்ளே இருப்பவன், நறுமணம் வீசும் கொன்றை மலரில் இருப்பவன், மலேயிடையே உள்ளவன், தீயிடையே இருப்பவன், காற்றில், இருப்பவன் , மேகத்திடையே இருப்பவன்; கைலாய மலையின் உச்சியில் எழுந்தருளியிருப்பவன்; திருக்காளத்தி யாகிய தலத்தில் கோயில் கொண்டவனுகிய அப்பெருமான் என் கண்ணில் இருக்கிருன். .

ஆா - கிரம்ப, இனம். கூட்டம். அண்டம் - உலகம். புனம்தி8ணப்புனம். கனம் - மேகம்.)

இது ஆருங் திருமுறையில் 8-ஆம் பதிகத்தில் உள்ள ஐந்தாவது திருப்பாட்டு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/21&oldid=610079" இலிருந்து மீள்விக்கப்பட்டது