பக்கம்:பேசாத நாள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்து போனர்

தோழி கேட்டாள்; "நீ இப்படி யாரையோ எண்ணி எண்ணி கைந்து புலம்புகிருயே, உன்னிடம் உண்டான இந்த மாற்றத்துக்குக் காரணம் என்ன?” என்று கேட்டாள். அந்த அழகிய இளம் பெண் உடனே விடை சொல்லவில்லை; சொல்லவும் முடியவில்லை. தன் னுடைய உள்ளம் கொள்ளே கொண்ட கட்டழகனே முதல் முதலிற் கண்ட காட்சியை நினைத்துப் பெருமூச்சு விட்டாள். முதற் காட்சி என்ன? அன்று பார்த்ததுதான். அதற்குப் பிறகு பார்க்கவே இல்லை. அவனேக் கண்டது. முதல் அவள் ஒரு வண்ணமாக மயங்கி யிருக்கிருள். தோழி இதை அறிந்துதான் கேட்டாள். சிறிது நேரம் கழித்துக் காதல் பூண்ட பெண் பேசத் தொடங்கினுள்.

"ஆமாத்துரர் என்ற ஊர் உனக்குத் தெரியுமா? என்று அவள் பேச்சும் ஒரு கேள்வியாக வந்தது.

'தெரியும். நடு நாட்டில் உள்ள தலம் அது. அந்த ஊரைப்பற்றி இப்போது என்ன யோசனை?”

"அந்த ஊருக்குத்தான் அவர் போயிருக்கிரு.ர்.”

. . 潔

"அவரா? அவர் யார்?

"என்னை இந்தக் கோலம் செய்தவர்.' -

தோழி விழித்துப் பார்த்தாள். 'நீ என்ன சொல் கிருய்?" என்று கேட்டாள். . . .

அந்த இளம் பெண் கூறத் தொடங்கிளுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/22&oldid=610080" இலிருந்து மீள்விக்கப்பட்டது