பக்கம்:பேசாத நாள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்து போர்ை 17

கிரீன் அன்று வீட்டுக்குள்ளே ஏதோ வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது என் காதில் ஒர் இனிய இசை விழுந்தது. யாரோ உள்ளத்தை இழுக்கும்படி பாடினர்கள். பாட்டென்று ஒரு சமயம் தோன்றியது; விணயென்று ஒரு சமயம் தோன்றியது; இரண்டும் இழைந்து ஒன்றுபட்டு ஒரு சமயம் காதில் ஒலித்தன. இத்தகைய இன்னிசையை நான் அதுவரையிலே கேட்ட தில்லை. அந்த இசை வீதியிலே கேட்டது. நெடுந்துாரத் திலே கேட்டு வர வர அண்மையிலே கேட்டது. யாரோ விணயோடு பாடுகிருரென்று தெளிந்தேன். அற்புதமான காந்தாரப் பண்ணேப் பாடினர். இவ்வளவு அழகாகப் பாடுகிறவர் யார் என்று பார்க்க வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. அந்த ஆவல் வர வர வளர்ந்தது. அந்த இசையோ, வா, வா என்று என்னே வலே போட்டு இழுத்தது.

நான் வெளியில் வந்தேன். வீதியிலே பார்த்தேன். ஒருவர் வீணேயைக் கையில் ஏந்திக்கொண்டு பாடிச் சென் ருர், அழகாகப் பாடுகிற அவரைப் பார்த்தேன். டம் பெல்லாம் துாய வெண்ணிறு பூசி இருந்தார். தலேயின் மேல் வெள்ளே மாக்லயை அணிந்திருந்தார். வெண் சோதி விசச் சிறிய வெள்ளிக் குன்று போலே அவர் சென்று கொண்டிருந்தார். . - முதலில் அவர் பாட்டைக் கேட்கலாமென்றுதான் வந்தேன். பிறகு அவரைப் பார்த்தேன். பார்த்த பிறகு அவர் அழகும் என் உயிரை இழுத்தது. அவரோ மெல்ல மெல்லப் பாடிக்கொண்டே சென்ருர், வெண் பொடியாடிய மேனியைக் கண்டேன். அந்த வெண்மையின் நடுவே கழுத்தில் ஒரு கறுப்பு. அது எத்தனே அழகாக இருந்தது, தெரியுமா? அவரிடம் என் உயிரையே பணயம் வைத்து விடலாம் என்று தோன்றியது. அவரை அணுகி

2 . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/23&oldid=610081" இலிருந்து மீள்விக்கப்பட்டது