பக்கம்:பேசாத நாள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. பேசாத காள்

இரண்டு வார்த்தையாவது பேசாவிட்டால் என் வாழ்வே பயனற்று விடும் என்ற நினைவு ஒன்று முளேத்தது. பெண்ணுயிற்றே; ஆடவரிடம் வலியப் பேசலாமா? என்று மனம் தடுமாறியது. அவரிடம் என்ன பேசுவது? என் உள்ளம் அவரைக் கண்ட பிறகு அடைந்த தடுமாற் றத்தைச் சொல்வதா? நாணத்தை இழந்து பெண்மையை உதறித் தள்ளில்ை அதைச் சொல்லலாம். நான் அந்த நிலைக்கு வரவில்லை; பேசாமல் இருக்கவும் முடியவில்லே. ஒருவிதமாக மனத்தில் அமைதியை ஏற்படுத்திக் கொண் டேன். நாணத்துக்கு அழிவு நேராமலும் என் ஆசைக்கு ஏமாற்றம் உண்டாகாமலும் பேசத் துணிந்தேன். விருந் தினரிடம் யாரும் கேட்கும் கேள்வியைக் கேட்டேன். "சுவாமி, உங்கள் ஊர் எது?” என்று மாத்திரம் கேட்க எண்ணி வாய் திறந்தேன். அவருடைய வெண் திருமேனி யில் உள்ள வெண்மைக்கிடையே பளிச்சென்று விளங்கிய அவருடைய அழகிய கழுத்தைப் பார்த்துக் கொண்டே பேசினேன். என்னேயும் அறியாமலே, அந்த அழகில் மயங்கிங்ண்ற மயக்கத்தால், 'கறை சேர் மணி மிடற்றிர், ஊர் ஏது?" என்று சொல்லிவிட்டேன். சொன்ன பிறகு காக்கைக் கடித்துக் கொண்டேன். . .

அதைக் கேட்டதுதான் தாமதம், அவர் உடனே என் வீட்டுக்குள்ளே வந்து விட்டார். நெடுந்துTரம் அலைந்து வந்து கொந்து போய், யாராவது நம்மைத் தம் விட்டுக்கு அழைக்க மாட்டாரா?” என்று ஏங்கினவர் போலத் தோன்றியது. - - .

அவர் வருகை எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி யைத் தந்தது. "எங்கள் வீட்டுக்கு வரலாமே!” என்று கான் சொல்லவில்லை; காணங்தான் காரணம். எப்படியோ அவர் என் உள்ளத்தை உணர்ந்து கொண்டார் போலும். நான் வருக்தி அழைத்து கொந்து கிடந்து தவம் செய்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/24&oldid=610082" இலிருந்து மீள்விக்கப்பட்டது