பக்கம்:பேசாத நாள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்து போனர் 19

வரக்கூடியவர் அல்ல அவர். அவரைப் பார்த்தால் அப்படித் தோன்றியது. ஆனால், தோழி, அவருடைய கருணையை என்னவென்று சொல்வேன்! தாம் மிகவும் கொந்தவரைப் போலக் காட்டிக்கொண்டு, நான் அவருக்கு கலம் செய் கிறதாக எண்ணி என் வீட்டுக்குள் வந்தார். - - வந்தது மாத்திரமா? அவர் என்னேடு பேசினரடி தோழி! ஆம், பேசினர். அந்த ஒரு கணத்திலே என் உள்ளத்தைத் தொடும்படி பேசினர். என்னே அவர் விளித்தாரே அந்த அழகு ஒன்றே போதுமே. நான் இடை துடங்க கின்றேனும்.

அவர் கழுத்தைப்பற்றி அணேத்துக் கொள்ளவேண்டு மென்ற எண்ணம் என் உள்ளத்தின் அடித்தளத்திலே இருந்திருக்கவேண்டும். அதல்ைதான் நான் கறை சேர் மணி மிடற்றிர் என்று அவரை அழைத்தேன். அது மாத்திரம் அல்ல. அவர் பாடினரே, அந்த இன்னிசையைத் தரும் கழுத்து அல்லவா அது அதல்ை அதனிடம் என் மனம் சென்றது. - -

இப்போது அவர் என் இடையைப் பற்றி அனேக்க எண்ணிஞரா, என்ன? என் ஆசை அப்படி கினைக்கச் செய்தது. 'நுடங்கு ஏர் இடை மடவாய்' என்று என்னே அவர் அழைத்தார். அவர் தம் திருக்கரத்தால் என்ன அணைக்கவில்லை. ஆனலும் அவர் என்னே அழைத்தாரே அக்த அன்புச் சொல் என்னே அணைத்தது. அது என் காது வழியே புகுந்து அமுத தாரையைப் பாய்ச்சியது. - 'கம்முடைய ஊரையா கேட்கிருய்? சொல்கிறேன் கேள். அங்கே எல்லோருமே வீணையும் யாழும் வாசிக்கிற வர்கள். நான் பாடுவதைக் கேட்டு நீ மகிழ்ச்சிஅடைகிரு யென்று தோன்றுகிறது. எங்கள் ஊருக்கு வந்தால் எங்கும் இன்னிசைதான் கேட்கும். அழகிய தாமரை மலர்க்ளின் மேல் அன்புடைய வண்டுகள் யாழைப் போலப் பாடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/25&oldid=610083" இலிருந்து மீள்விக்கப்பட்டது